Friday, January 27, 2012

வெளிச்சம் தேடிய எலி

எலியொன்று தனது பொந்துக்குள் இருட்டில் தனியாக இருக்க பயப்பட்டது. அது தனது பொந்துக்குள் வெளிச்சம் பரப்பினால் நல்லது என எண்ணியது. இரவு முழுவதும் என்ன செய்யலாம் என்று சிந்தித்தது.

அடுத்த நாள் காலையில் தனது பொந்தைவிட்டு வெளியே வந்த எலியிடம் வழக்கம் போல சூரியன் காலை வணக்கம் சொன்னது. பதில் சொன்ன எலி சூரியனிடம் தனது ஆசையைக் கூறியது.



'சுரிய நண்பா. எனக்கு இருட்டில் தூங்க பயமாக இருக்கிறது. எனது வீட்டுக்கு வருகிறாயா?' என்றது.

அதற்கு சூரியன்

'நான் வருவதற்கு உனது பொந்தில் இடம் போதாது. அத்துடன் எனது வெப்பத்தையும் நீ தாங்கிக் கொள்ளமாட்டாயே' என கூறியது.

இரவில் எலி நிலாவைக் கண்டு தனது விருப்பத்தைக் கூறியது.

அதற்கு நிலா

'நான் இரவில் வாகத்துக்கு துணையாக இருக்க வேண்டுமே. என்னால் வர முடியாது' என்றது.




சிந்தித்த எலி நட்சத்திரத்திடம் தனது துயரத்தைக் கூறி அழுதது.

'எலி நண்பா. நான் காலை விடியுமுன்னே போய்விட வேண்டும். என்னால் உன் வீட்டுக்கு வர முடியாது. என்னை மன்னித்துக்கொள்' என்றது.

எலிக்கு சரியான கவலை. அது தனது வீட்டு வாசலில் குந்தியிருந்து இருட்டில் பயத்துடன் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மின்மினிப்பூச்சி பறந்து வந்தது.
உடனே எலிக்கு பளிச்சென ஒரு யோசனை தோன்றியது. எனவே அது மின்மினியிடம் தனது பிரச்சனையைக் கூறியது.

எலி சொன்னதைக்கேட்டு கவலையடைந்த மின்மினி ஒவ்வொரு இரவிலும்; தான் வந்து துணையாயிருப்பதாகவும், வெளிச்சம் தருவதாகவும் கூறியது.

அன்றிலிருந்து இரண்டும் நல்ல நண்பர்களாய் வாழ்ந்து வந்தன.

No comments:

Post a Comment

மின்ட்டு

கதைச் சுருக்கம் மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட ...