Friday, January 27, 2012

தலையணையில் தூங்க நினைத்த காகம்

மொட்டை மாடியில் வயதான ஒருவர் தலையணையில் தலைவைத்து சுகமாக தூங்குவதை ஒரு காகம் கண்டது. கம்பிகளும், தும்புகளும் அடங்கிய கூட்டில் தானும் தனது குஞ்சுகளும் தூங்குவதை எண்ணிப் பார்த்து கவலையடைந்தது. தாங்களும் தலையணை ஒன்றில் இவ்வாறு தூங்கினால் எவ்வளவு நல்லது என எண்ணியது காகம்.

ஒருநாள் அது தலையணையை எடுப்பதற்காக ஒரு வீட்டினுள் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தது. தூரத்திலிருந்த ஒரு நாய் காகத்தைக் கண்டு கோபத்துடன் ஓடி வந்தது. இதைக்கண்ட காகம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து வந்துவிட்டது.



இன்னொரு முறை யன்னலினூடாக காகம் நுழையப் பார்த்தது. அப்போது அங்கே வந்த வீட்டுப்பெண் காக்கையைக் கண்டதும் கோபப்பட்டு சூ சூ என்று காகத்தை விரட்டிவிட்டாள்.
அடுத்த நாள் அந்த வீட்டிலுள்ள தலையணையை காயப்போட்டிருப்பதை காகம் கண்டது. மகிழ்ச்சியுடன் காகம் தலையணையை நோக்கி வந்து கொத்திப் பார்த்தது.

அது கஷ்டப்பட்டு தனது கால்களாலும், சொண்டாலும் மிருதுவாக இருந்த தலையைணையை இழுக்கப் பார்த்தது. தலையணை பாரம் அதிகமாக இருந்ததால் அந்த முயற்சியிலும் காகம் தோற்றுவிட்டது.

ஒருநாள் இரை தேடுவதற்காக வெளியே சென்ற காகம் தையற்கடை ஒன்றின் முன்னால் உள்ள மரத்தில் இளைப்பாறியது. அப்போது அந்த தையற்காரன் பஞ்சுகளை வைத்து தலையணை தைப்பதைக் கண்டது.

'அடடா. இது தான் நம் காட்டில் இருக்கிறதே. இலவ மரத்திடம் போய் கேட்போமே'

என்று மகிழ்ந்த காகம் உற்சாகத்தோடு காட்டை அடைந்தது. அங்கிருந்த இலவ மரத்திடம் தனது ஆசையைக் கூறி பஞ்சைக் கேட்டது.

இலவம்பஞ்சை எடுத்துக்கொள்ளுமாறு மரமும் கூறியது. அதை பத்திரமாக சேகரித்த காகம் சின்ன தலையணை ஒன்றை அமைத்துக்கொண்டு குஞ்சுகளுடன் சுகமாக தூங்கியது.

No comments:

Post a Comment

மின்ட்டு

கதைச் சுருக்கம் மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட ...